அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை ‘வாஹப்வாத’ கொள்கையை அங்கிகரிக்கிறதா? புறக்கணிக்கிறதா? என்ற கேள்விக்கு உலமா சபை இதுவரையில் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலமா சபையின் இந்த மௌனம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த விடயங்கள அடங்கிடி கடிதம் ஒன்றை உலமா சபைக்கு பொதுபல சேனா அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அகில இலங்கை உலமா சபையின் செயலாளர் அர்கம் நுராமினின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட பதில் கடிதத்திற்கு பதிலாக இலங்கையின் இஸ்லாம் புத்திஜீவிகள் என்றும் இஸ்லாம் மக்களின் பிரதிநிதிகள் என்ற கட்டமைப்பிற்குள் இருந்துக் கொண்டு செயற்படும் அகில இலங்கை ஜமயதுல் உலமா சபையிடம் பல கேள்விகளை வினவி பொதுபல சேனா அமைப்பு பகிரங்க கடிதம் அனுப்பி வைத்திருந்தது.
இதில் பிரதானமாக அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை ‘வாஹ்வாத’ கொள்கையை அங்கிகரிக்கிறதா? புறக்கணிக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் கேட்கப்பட்டிருந்தது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இக்கேள்வியை ஊடக சந்திப்பு ஊடாக பலமுறையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாகவும் வினவியிருந்தார்.
ஆனால் உலமா சபை இதுவரையில் இக்கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஊலமா சபை நிகழ்நிலை முறைமை ஊடாக ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பிரதான கொள்கையாக கருதப்படும் வஹாப்வாத கொள்கைகள் தொடர்பில் குறிப்பிடாமல் கருத்துக்களை திரிபுப்படுத்தி அனைவரது கவனத்தையும் திசைத்திருப்பி விடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
அடிப்படைவாத கொள்கையில் உலமா சபை ஈர்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களை செயற்படுத்துமாறு உலமா சபையின் செயலாளர் நுராமின் குறிப்பிட்டுள்ளார்.
இக்கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்த வேண்டும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் 398 ஆவது பக்கத்தில் வஹப்வாதம் தடை செய்யப்பட வேண்டும் எனவும் 474 ஆம் பக்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தௌஹீத் (வஹாப்) வாதம் என்ற அடிப்படையில் செயற்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளன
. அகில இலங்கை ஜமயதுல் உலமாக சபை ‘வாஹப்வாதம்’ தொடர்பில் ஒரு வார்த்தையேனும் கருத்துரைக்காமல் இஸ்லாம் அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவா என்று கருத தோன்றுகிறது.