அமைச்சு பதவியை துறக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்துள்ளார் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் , மைத்திரி அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“விரைவில் பதவி விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆளுங்கட்சியினரும், அரச தலைவரும் அழுத்தம் கொடுத்துள்ளனர். கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்தின்போது இது பற்றி விஜயதாச ராஜபக்ச எமக்கு தெரியப்படுத்தினார்.
என்ன நடக்கின்றது என்பது பற்றி பார்த்துக்கொண்டிருக்கின்றோம். சுதந்திரக்கட்சி எதிரணியில்தான் உள்ளது. எனவே, ஆளுங்கட்சிக்கு சென்றுள்ள கட்சி உறுப்பினர்கள் அரசில் இருந்து விலக வேண்டும். விஜயதாச ராஜபக்ச ஆளுங்கட்சியில் இருந்து எமது பக்கம் இணைந்துள்ளார்.” – என்றார்.