கிளிநொச்சி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை!

அரசாங்கம் உரிய நேரத்தில் நெல்லை கொள்வனவு செய்ய தவறுகின்ற நேரத்தில் அதனை பயன்படுத்தி தனியார் மிகக் குறைந்த நெல்லை கொள்வனவு செய்வதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குடமுருட்டி குளத்தின் கீழ் 340 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொண்ட நிலையில் தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாமையால் தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலையுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமது நெல்லுக்கு நிர்ணய விலையில் அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

விளைச்சலும் குறைவாக காணப்படுவதாகவும் தற்போது ஒரு மூடை 6500 ரூபாவிற்கு விற்பனை செய்யமுடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews