யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முருக பக்தர் அருணகிரி நாதருடைய குரு பூசைப் பெருவிழா சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திருமுன்நிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் வாகீசன் ஆசிரியர் தலமையில் சுழிபுரம் அம்பாள் அறநெறி பாடசாலை மாணவர்களுன் பஞ்ச புராண ஓதுதலுடன் நேற்று 22/06/2024 காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது
இதில் தொடக்கவுரையை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு உறுப்பினர் ஆசிரியர் இ.வாகீசன் நிகழ்த்தியதை தொடர்ந்து
மூளாய் வதிரன்புலோ சித்தி விநாயகர் ஆலய ஞான ஒளி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும், யாழ்ப்பாண கல்லூரி மாணவு செல்வி.ஆருத்திரா ஜெயமோகனின் முருகன் நடனமும், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க உறுப்பினர் செல்வன் ப.பிரவீனனின் அருணகிரிநாதர் எனும் தலைப்பில் சொற்பொழிவும்,
அதனை தொடர்ந்து இசைத்துறை கலைமாணி
திருமதி.சித்திரா ஹவிக்குமாரின் திருப்புகழிசையும் இடம் பெற்றது.
தொடர்ந்து அருணகிரியான் எனும் தலைப்பில் இசைப் பேராசான் இசைக் கலாநிதி முன்னாள் இசைத்துறை தலைவர் நா.வி.மு.நவரத்தினம் அவர்களின் அருணகிரியான்”
எனும் தலைப்பில் பிரசங்கமும் இடம் பெற்றதுடன் அறநெறி மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வைக்கப்பட்டடதுடன்
அருணகிரிநாதர் குரு பூசை இடம் பெற்று அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், அடியவர்கள், அறநெறி பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை
கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு கடந்த 19/06/2024 அன்று பாதுகாப்பு வேலி அமைப்பதற்க்காக நாலாம் கட்டமாக ரூபா 250,000 நிதியும், வழகஙப்பட்டது. இதுவரை ரூபா 750000/- நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியை டென்மார்கை சசேர்ந்த மாதவமேனன் குடும்பத்தினர் சந்நிதியான் ஆச்சிரமாக வழங்கிவைக்கப்பட்டதுடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் காலை 7:00 மணியளவில் திருவாசக முற்போதலும், 10:45 மணியளவில் வெள்ளிக்கிழமை வாராந்த நிகழ்வில் சொல்லின் செல்வர், செஞ்சொற், செல்வர் செல்வவடிவேல் அவர்களின் மகாபாரத தொடர் சொற்பொழிவும் இடம் பெற்றது.
இந்நிகழ்விலும் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.