
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கற்பிட்டி பகுதியில் மரணமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது


வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியிலிருந்து புத்தளம் கற்பிட்டி பகுதிக்கு கடற்றொழிலிற்க்காக சென்ற வேளை அவர் நேற்றுக் காலைவரை கரை திரும்பாத நிலையில் மீனவர்களால் தேடுதல் நடாத்தப்பட்ட போது சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு
மாமுனை பகுதியை சேர்ந்த
டிசாந்தன் பெர்னான்டோ ( கண்ணம்மா) என்கின்ற 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வீசிய கடுமையான காற்றின் காரணமாக ஏதாவது விபத்து இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர் கற்பிட்டியை சொந்த இடமாக கொண்டவர் என்றும், மாமுனையில் திருமணமாகி வசித்து வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் மாமுனையிலிருந்து கற்பிட்டிக்கு கடற்றொழிலிற்க்காக சென்றிருந்தார் என்பதுடன் இவர் மாமுனை
கலைமகள் விளையாட்டு கழகத்தின் உபதலைவரும் வடமராட்சி கிழக்கு இளைஞர் கழக சம்மேளன உறுப்பினருமாவர்.