
பறவைக் காய்ச்சல் பரவுவதைச் சமாளிக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பாகத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) இதுவரை எந்த ஒரு சிறப்பு பொது சுகாதார அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
உலக சுகாதார நிறுவனத்தால் இதுவரை எந்த பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவு மற்றும் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய 20 மருத்துவமனைகளில் தினசரி சோதனைகளை நடத்தி வருகின்றன.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் H9, H7 மற்றும் H5 பறவைக் காய்ச்சலை கண்டறிய தேவையான PCR சோதனைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.