உடன் வெளியேறுங்கள் : கனடா விடுத்துள்ள எச்சரிக்கை 

லெபனானில்(lebanon) வாழும் கனேடியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென கனடா அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.

கனேடிய(canada) வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி(Mélanie Joly) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

லெபனானில் தற்போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே கனேடியர்கள், லெபனானுக்கான பயணங்களை மேற்கொள்வது உசிதமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லெபனானில் தங்கியுள்ள கனேடியர்கள் வர்த்தக விமானங்களின் ஊடாக அங்கிருந்து வெளியேறுவது பொருத்தமானது என அறிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews