
அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி திருவிழா நேற்று மின்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.










மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்மாள் சிங்க வாகனத்தில் ஏறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலய கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.
பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.