
அஸ்வசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை நேற்று (27) 11.6 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளது.