சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடு கடந்த காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அமுதசுரபி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பணாபாட்டு பேரவை உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் திரு. சிவநாதன் தலமையில் பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து ஓய்வு பெற்ற அதிபர் செஞ்சொற் செல்வர் இரா. செல்வவடிவேல் வெளியீட்டுரை நிகழ்த்தியதை தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை ஆசிரியரும் சைவப் புலவருமான கந்தசாமி கைலநாதன் நிகழத்தினார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம அடியவர்கள், தொண்டர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாத யாத்திரையினருக்கு சென்றவர்களை அம்பாறை, பொத்துவில் குண்டுமடு கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீமுருகன் ஆலயத்தில் வைத்து குளிர்பானம் உள்ளடங்கலாக சிற்றுண்டி வகைகள் ஆறாவது தடவையாக வழங்கிவைத்தார்.
இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அமுதசுரபி மோகனதாஸ் சுவாமிகள் தமது தொண்டர்கள் சகிதம் நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் குடி நீர் வசதியின்றிய மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்க்கென அம்பாறை சைவநெறிக் கூடத்திற்க்கு ரூபா 550,000 பெறுமதியான உழவு இயந்திரப் பெட்டி ஒன்று அம்பாறை சைவநெறிக்கூடத் தலைவர் திரு.கணேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.