சுரேஸ்– இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக இந்தியாவும் ஜனாதிபதியின் கூட்டு தயாரிப்பே இந்த பொது வேட்பாளர் நாடகம் இந்த நாடகத்தின் நடிகர்களாக தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதறடிக்கின்ற செயற்பாட்டினை செய் பணத்துக்காக வந்த கதாபாத்திரங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் பொது வேட்பாளர் என்ற நாடகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழர்கள் இந்த தீவில் தங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக கடந்த 75 வருடமாக ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடி 2009 பாரிய இனழிப்புக்கு உட்படுத்தப்பட்டு இன்றுவரையும்; எந்தவிதமான அரசியல் தீர்வும் இல்லாமல் நடு தெருவில் நிற்கின்றனர். மக்கள் தங்களது இருப்பை தக்கவைப்பதற்கா பலகோடிக்கணக்கான சொத்துக்களையும் 5 இலச்சத்துக்கு மேற்பட்ட உயிர்களையும் தியாகம் செய்து நிலங்களை இழந்து இன்று தெருத் தெருவாக போரட வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு உள்ள உரிமைகளை போன்று தமிழ் மக்களும் கௌரவத்துடன் வாழவேண்டுமாக இருந்தால் இலங்கையினுடைய ஒற்றையாட்சி கட்டமைப்பு நிராகரிக்கப்பட்டு அது ஒரு சமஸ்டி கட்டமைப்பாக கொண்டுவரப்படவேண்டும். ஆகவே தமிழ் மக்களின் தொடர்ச்சியான ஒரு போராட்டம் சமஸ்டி கட்டமைப்புக்கானது அதனடிப்படையில் இந்தியா தமிழ் மக்களை தமது தேச நலனுக்காக பகடைக்காயாக அடிமைப்படுத்தி வந்திருக்கின்றது. எனவே எங்கள் மக்களின் நலன்கலுக்காகவும் இந்த தீவில் வாழக்கூடிய ஒரு சமஸ்டி கட்டமைப்பை கொண்டுவர இந்தியா இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து மாறாக தங்களது நலன்களை கொண்டு இலங்கையின் ஆட்சியாளர்களை (ஜனாதிபதியை) கொண்டுவருவதற்காக தமிழ் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி கொண்டுவந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் தங்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் மக்களை எந்தவிதமான கரிசனையும் கொள்ளாது மீண்டும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக தினிக்கப்பட்ட 13 வது திருத்தசட்டத்தை திரும்பவும் தினிப்பதற்காக தமிழர்களை அடிமையாக பயன்படுத்துவற்காக பல திட்டங்களை தீட்டிவருகின்றது அது இன்று பொதுவேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர் இது இந்தியா ரணிலின் கூட்டு நரித்தனமான வேலை இதற்கு பல நபர்களை ஒருங்கிணைத்து பணத்தை வழங்கி பொதுவேட்பாளர் என்ற நாடகத்தை அரங்கேற்றி தமிழ் மக்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக செயற்படுத்த ப்படுகின்றது. தமிழர்களை பொறுத்தமட்டில் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் இருந்த காலத்தில் கூட பொது வேட்பாளரை எந்த சந்தர்பத்திலும் நிறுத்தியது கிடையாது தேர்தலை நிராகரித்துள்ளனர். எங்களை பொறுத்தளவில் தேர்தலில் வாக்களிப்பதும் நிராகரிப்பதும் ஒரு ஜனநாயக பண்பு அதனடிப்படையில் வடக்கு கிழக்கில் தமிழர்களாகிய நாங்கள் நிகாரிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த 3 மாங்களுக்கு முன் தெரிவித்துவந்தோம். தேர்தலை பகிஸ்கரிப்பின் மூலம் தான் நாங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு பாடம் புகட்டமுடியும் இதற்கு மாறாக இந்த பகிஸ்கரிப்பு விடையத்தை நீத்துப்போவதற்காக இந்த பொது வேட்பாளர் நாடகம் அரங்கேற்றிவருகின்றனர் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். இந்த பொது வேட்பாளர் விடை மூலமாக ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவைப்பதற்கான நாடகமாக பார்க்கின்றோம். அது மக்களுக்கு வெளிபடையக தெரியும் மக்கள் இந்த விடையத்தில் மிக அவதானமாக இருப்பார்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு போகமாட்டார்கள். அது மக்களுடைய வரலாற்று ரீதியான கடமை அதேநேரத்தில் ஜனநாயகபண்பு என்றார்.