
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் கண்முன் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதீஸ்வரன் நிலாஜினி லகிதா (வயது 40) என்ற 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் கணவர் சுவிஸில் வசித்து வருகின்றார். அவருடன் கடந்த 24ஆம் திகதி வீடியோ அழைப்பில் கதைத்துக்கொண்டு இருந்தவேளை இருவருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பெண் கணவனின் கண்முன்னே தூக்கிட்டுள்ளார்.
இதன்போது கணவன் அயல் வீட்டவருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.