
இலங்கை சிவசேனை சிவதொண்டர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராக கடந்த வாரம் பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்ற முதற் தினத்திலேயே வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் படங்களை அகற்றிய கிறிஸ்தவ கல்விப் பணிப்பாளர் திரு.பிறட்லீயை உடனடியாக யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரிய கவனயீர்ப்பு போராட்டம் நேற்று மாழில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.








“இந்து பாரம்பரிய மரபுகளை அழித்து சிவபூமியை கிறிஸ்துவ பூமியாக்காதே, தமிழர் கல்விப் பண்பாட்டினை அழிக்காதே, வலயப் பணிப்பாளரின் மதவெறி செயற் பாட்டினை கண்டிக்கின்றோம், உடலின் உயிரான சைவத்தினை அழிப்பது தமிழன அழிப்பே, தமிழ் மண்ணின் தமிழ் கடவுளை அகற்றும் துணிவின் பின்புலம் யார்? தமிழன விரோதியே வலயத்தினை விட்டுபோ” என்ற வாசகங்கள் எழுதிய பாதாதைகள் ஏந்தியும் கோசமிட்டும் தமது எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதில் இலங்கை சிவசேனை தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம், சிவ தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.