ரணிலுக்கு நிபந்தனை விதித்த மொட்டுக் கட்சி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடும் நபர் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பெயர்களையும் முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சாகர காரியவசம், சரியான நபர் உரிய நேரத்தில் முன்னிறுத்தபடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தங்களுடைய கட்சியின் வேட்பாளர் மொட்டு சின்னத்தின் கீழ் முன்னிறுத்தப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணையும் பட்சத்தில், அவரை மொட்டு சின்னத்தில் களமிறக்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்

ளார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews