
நயினாதீவு நோக்கி சென்ற படகில் பயணித்த ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
பொருட்களை ஏற்றிச் சென்ற படகு பாரத்தினால் கடலில் கவிழ்ந்தது இந்நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.