
பருத்தித்துறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு!
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒரு தொகை நேற்றைய தினம் 03/07/2024 மீட்கப்பட்டுள்ளன.



இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா, 290 போதை மத்திரைகள் மற்றும் தராசு ஒன்று என்பன மீட்கப்பட்டன.
இருப்பினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்