கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (04.07.2024) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெற்று முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்று வருகின்றது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பல்வேறு தரப்பினரும் கலந்து இவ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.