
யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்று 04/07/2024 யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.





குறித்த நிகழ்வு நேற்று 04/07/2024 யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் காலை 09 மணிக்கு இடம்பெற்றது.
இதில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனை வரவேற்று பொன்னாடை போர்த்து, மலர்மாலை அணிவித்து வரவேற்றதுடன் தமது அலுவலக கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி ஏஸ்.ஸ்ரீமோகன், மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரி கள்,உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தவினால் 03.07.2024 அன்று பிரதமர் அலுவலகத்தினால் வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனுக்கான நியமனம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.