நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி மகத்தான வெற்றி

நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது.

அந்தவகையில், பிரித்தானியாவில் புதிய அரசை தோ்வு செய்யும் இத்தோ்தலில், உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

சுமாா் 4.6 கோடி வாக்காளா்களுக்காக 40,000 வாக்குப் பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.

குறித்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை என்ற நிலையில் அதற்கும் மேலான இடங்களை தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு தொடர்பில் தொழிற்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

வாக்களித்த மக்களுக்கு நன்றி. இது ஒரு பெரிய பொறுப்பு எனவும் நீங்கள் எங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள் எனவும் தெரிவித்தார்.

இன்னும் 93 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகவேண்டியுள்ள போதும், ஆட்சியமைக்க அவசியமான 326 ஆசனங்களைத் தொழிலாளர் கட்சி கடந்துள்ளது.

இதன்படி, கெர் ஸ்டாமர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews