
முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுப் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் காணப்படும் பகுதி கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிேலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.