ஈரானில் மசூத் பெசெஸ்கியன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி!

ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

பதிவானவற்றில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்தக் காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள் சுகாதார அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். 38.6 சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி இரண்டாம் இடத்தில் இருந்தார்.

ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று  இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான கிட்டத்தட்ட 30 மில்லியன் வாக்குகளில் பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை சுமார் 56 சதவீதம் வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

சயீது ஜலிலி 13 மில்லியன் வாக்குகளுடன் பின்தங்கினார். எனவே ஈரான் அரசின் புதிய ஜனாதிபதியாக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளார்.

மசூத் பெசெஸ்கியன் தொழிமுறையாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். இவர் ஈரானில் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டும் வரும் பெண்கள் பர்தா அணியும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்திய இனக்குழுவைக் சேர்ந்த தாய்க்கு பிறந்த மசூத் பெசெஸ்கியன் இரானின் பலதரப்பட்ட சிறுபான்மை இனக்குழுக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவராக உள்ளார்.

கடந்த 2016 முதல் 2020 வரை பாராளுமன்ற துணை சபாநாயராகவும் பணியாற்றினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews