யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 05/07/2024 காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் செஞ்சொற் செல்வர் செல்வவடுவேல் தலமையில் பஞ்ச புராண ஓதுதலுடன் அரம்மானது.
இதில் அயில் வேலன் கவி எனும் தலைப்பில் உள வளத்துணையாளர் நா.நவராஜ் அவர்கள் ஆண்மீக உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
இதேவேளை சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுக்கு அம்பாறை உகந்தை முருகன் ஆலயத்தில் பல இலட்சம் பெறுமதிகளில் சமையலுக்கு தேவையான உணவுப் பெருட்கள் வழங்கி வைக்கப்பட்டுடன் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது.
சிலாபம் முன்னேஸ்வரம் சிவாலயத்தில் கடந்த 03/07/ 2024 ந் திகதி புதன்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணிவரை இடம்பெற்ற திருவாசகம் முற்றோதல் சந்திதியான் ஆச்சிரம சுவாமிகள், சைவகலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள், இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆன்மீகப் பெரியார்கள் என பல பேர் பங்கு கொண்டு முற்போதுதலில் ஈடுபட்டனர்.
மேலும் புத்தளம் சேனைக் குடியிருப்பு, மணல் குன்று ஆகிய கடந்த 12/06/2024 அன்று கண் பரிசோதனை செய்யப்பட்ட 86 பயனாளிகளுக்கும் மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கிவைத்தார்.