
28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று 10.07.2024 நள்ளிரவு 1.30 மணியலவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
வவுனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர்ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, 28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சாவை வவுனியா பொலிசார் பறிமுதல் செய்ததுடன், மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.