நாளை முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது.
அதன்படி, 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 61 தொடக்கம் 90 அலகுகளுக்கு இடைப்பட்டு பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் 55 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன், ஒரு அலகுக்கு செலுத்தப்படும் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மதஸ்தலங்களுக்கான மின்சார கட்டணங்களை 30 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்