
ஆசிரியர்களின் வேதனப் பிரச்சினையை முன்னிறுத்தி அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டியில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதேவேளை தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.