
வைத்தியர் அர்ச்சானா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்துகள் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.