
வடமாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு என்னும் கருப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.





இதில் அரச நியமனத்தில் உள்வாரி, வெளிவாரி, பாகுபடுவேண்டாம் எல்லோருக்கும் ஒரே பட்டம் தான், வயது ஏறுது வாழ்க்கை போகுது, வேலையை கொடு என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பு கவனயீர்ப்பினை முன்னெடுத்ததுடன் கோசழுப்பினர்.
இதனை தொடர்ந்து சிதறு தேங்காய் அடித்து தமது எதிர்ப்பினை முன்னெடுத்தனர்.
இதில் 40 மேற்பட்ட வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தின் உள்ளிட்ட மாணவர்கள் பங்குபற்றினர்.