யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என அமைச்சர் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அண்மையில் வைத்தியசாலை பதில் அத்தியட்சகராக கோபால மூர்த்தி ரஜீவ் கடமைகளை பொறுப்பேற்ற நிலையில், விடுமுறையில் இருந்து வந்த அர்ச்சுனா இராமநாதன் தானே வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவா? கோபாலமூர்த்தி ரஜீவ்வா? என்ற சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.