பதவி விலகினார் மருத்துவர் இராமநாதன் அர்சுணா..!

மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது சமூகவலைத்தள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் கூறுகையில், “இன்றிலிருந்து இந்த கறை படிந்த முறைமையில் மருத்துவ நிர்வாகியாக வேலை செய்ய மாட்டேன்.

அதேவேளை, உங்கள் வைத்தியசாலைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை ஒரு அரசியல்வாதியிடம் தெரிவியுங்கள்.

நான் எங்கு சென்றாலும் பி.எச்.சி அதிகாரிகளும் எமது மக்களும் என் மனதில் இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

நீதிபதியால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தங்கு விடுதிகளில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்பும் அதனை மறுக்கும் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கம் நடந்து கொள்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

“நீதிபதியால் மிகத் தெளிவாக நான் ஆதார வைத்தியசாலையின் எனக்குரிய தங்கு விடுதிகளில் தொடர்ந்து இருக்கலாம் என்பதையும் அது அடிப்படை உரிமை என்பதையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், வைத்திய அதிகாரிகள் சங்கம் நீதிமன்றத்தை அவதூறு செய்யும் நிலையில் மேற்படி தொழிற்சங்க போராட்டத்தை அறிவித்திருப்பது என்பது இலங்கையில் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும் என நான் கருதுகிறேன்.

மனசாட்சி உள்ள சட்டவாளர்கள் யாராவது யாழ்ப்பாணத்தில் இருப்பின் தயவு செய்து இவ்விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கோரியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews