சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பல நிர்வாக சீர்கேடு இருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வைத்தியர் ராஜீவ் அவர்கள் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்றையதினம் திருநீல கண்டன் கடிக்கு உள்ளான தனது தந்தையை சவகச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு யாரும் பணியில் இருக்கவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகன் முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வைத்தியர் ரஜீவ் அவர்களின் கவனத்திற்கு மன்னிக்கவும் ராஜீவ் Sir கவனத்திற்கு,
நேற்று இரவு 12.40 திருநீல கண்டன் கடிக்கு இலக்காகிய எனது தந்தையை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு யாரும் இல்லை புதிதாக இருக்கும் opt க்கு சென்றோம் அங்கும் யாரும் இல்லை. பின்னர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அறைக்கு சென்று பார்த்தோம்.
அங்கும் யாரும் இல்லை அதன் பின் தற்போது யாழ்ப்பாண போதான வைத்திய சாலைக்கு கொண்டு சென்று A&E இல் அனுமதிக்க பட்டுள்ளார் . நேற்று இரவு cctv ஐ பார்க்கவும் சாவகச்சேரி வைத்திய சாலை நிர்வாகம் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.facebook.com/100075274747190/posts/pfbid02AjgRuFFtdVwa9wrC1yiFfx7DuQv3eceLn2qjexCvKc3FGTg8TERFcJ9qkvnQrAFul/?app=fbl