தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா நினைவு அரங்கில், கூட்டணியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ் மக்கள் கூட்டணியின் கொடியினை செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் ஏற்றியதுடன் மக்கல விளக்கினை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சிறப்பு பேச்சாளரான யாழ். பல்கலைக்கழக அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மயூரன், பேராசிரியர் கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஏற்றிவைத்தனர்.
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் உறுவுகளுக்கான பொது நினைவுச்சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் ஏற்றிவைத்ததுடன் அண்மையில் உயிரிழந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.