இலங்கையில் கறை படிந்த கறுப்பு நாள் யூலை 23…!

41 வருடங்களுக்கு முன்னர் 1983 இதே நாட்களில் இலங்கையில் மிக மோசமான இனப்படுகொலை இடம் பெற்ற நாள் இதில் 2000வரையிலான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். 5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன. 1800 வரையிலான தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பலத்த காவலில் சிறையில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.

அரசே திட்டமிட்டு பொலிஸ் மற்றும் ராணுவத்தின் முன்னிலையில் அவற்றின் உதவியோடு செய்தது. நடந்தது இனப்படுகொலை. ஆனாலும் இன்றுவரை அரசும் இந்திய அரசும் இதனை இனக்கலவரம் என்றே கூறிவருகின்றன. அதுமட்டுமல்ல இதுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு பகிரங்க மன்னிப்பை கூட ஆட்சியார்கள் கோரவில்லை

 

Recommended For You

About the Author: Editor Elukainews