சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கேவில் சந்தியில் இருந்து சில படகுகள் சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளது
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழிலை தடை செய்ய கோரி போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத கடற்படை தொடர்ந்தும் அவர்களை கைது செய்யாமல் சுதந்திரமாக இன்றும் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து ஐம்பது படகுகளில் சற்றுமுன்னர் கடலுக்கு சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக கடற்படையை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத தொழிலுக்காக இன்று கேவில் சந்தியில் இருந்து புறப்பட்ட அதே படகுகள் நேற்றும் சுதந்திரமாக கடலுக்கு சென்று பெருமளவான மீன்களை அள்ளிவந்ததாகவும் இவர்களை கடற்படை கைது செய்யாததன் காரணம் கையூட்டல் வாங்குவதா என மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவர்கள் நாளாந்தம் சட்டவிரோத தொழிலுக்கு செல்வதாகவும் இவர்களது படகுகள் இதுவரை காலமும் கைது செய்யாமைக்கான காரணத்தை கடற்படைதான் கூறவேண்டுமெனவும் தெரிவித்த மீனவர்கள் கேவில் சந்தியில் இருந்து புறப்பட்ட படகுகள் அனைத்தும் இன்று இரவுக்குள் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்