
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் மூன்று உழவியந்திரங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.





கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ், விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்ததுடன் மூன்று உழவியந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.