இசைப்பிரியன் அல்லது சேகுவேரா அவர்கள் 25 ஆம் திகதி யூலை மாதம் வியாழக்கிழமை இன்று காலை காலமானார்.
வன்னி புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பை முடித்து, போராட்ட காலத்தில் நிதர்சனம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த இவர், 2009 இற்குப் பின்னர் ஊடகவியலாளராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் வட போர்முனை பயிற்சி ஆசிரியராக இருந்து இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஊடகப் பேச்சாளரும், அரசியல் – சமூகச் செயற்பாட்டாளருமான இவர் சுயாதீன ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் கால் பதித்துள்ளார். இசைப்பிரியன் சமூகப் பிரக்ஞைமிக்க ஒருவராவார் தன்னுடைய ஊடகப் பயணத்தின் ஊடாக சமூகத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்திருந்தார்
இவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம், இவரது திடீர் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம் பெறறுவருகின்றன.