யாழில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இடையிலான இசைப்போட்டி!

சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு. வேலன் சுவாமிகள் அவர்களின் ஆசியுரையுடனும் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் (அதிபர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை) அவர்களின் வாழ்த்துரையுடனும் காலை 9 மணியளவில் ஆரம்பித்த இப்போட்டி நிகழ்ச்சி பிற்பகல் 5.30 வரை தொடர்ச்சியாக நடை பெற்றது.
இப் போட்டி நிகழ்வை சாவிகா சங்கீத அறிவாலய உப தலைவர் செல்வி.கஜந்தினி பாலேந்திரராஜா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்ததோடு, முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் (முதலாவது பீடாதிபி,யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி),திரு.யோகானந்தம் ஜெகானந்தம் (அதிபர்,ஆனைப்பந்தி மெ.மி.த.க பாடசாலை), செல்வி.திலகவதி துரைச்சாமி (இயக்குநர் ,புதிய வாழ்வு நிறுவனம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். 70ற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்ட இப்போட்டி நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல இசைக்கலைஞர்கள் திருமதி. வாசஸ்பதி ரஜீந்திரன், திருமதி. விக்கினேஸ்வரி நரேந்திரா, திரு. நவரட்ணம் பரந்தாமன், திரு.  ரஜீந்திரன் சுரசாகித்தியன், திரு. இராசரத்தினம் நிரோஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இப் போட்டியானது வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியக் கருவி இசைத்தல் போன்ற பிரிவுகளில் இடம்பெற்றதோடு  அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கி நிகழ்த்தப்பட்ட இசைப்போட்டி என்பது குறிப்பிடதக்கது.
மாற்றுத்திறனாகளின் இசைத் திறமையினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இப் போட்டி 20 இற்கு மேற்பட்ட இளம் தன்னார்வலர்களின் அணிசேர் முயற்சியால் ஒழங்கமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பம்சமாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews