இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கட்சி பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் மற்றும் இராஜ தந்திரிகளுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு.
மதிப்பிற்குரிய ஸ்ரீ நரேந்திரமோடி, இந்தியப் பிரதம மந்திரி, 152. சௌத் புளொக் , றெய்சினா , புது டெல்லி. 110011
அன்புடன் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்களுக்கு ,
இந்தியத் தலையீட்டிற்கான அவசர முறையீடு
தங்களுடைய இலங்கைக்கான இறுதி விஜயத்திலிருந்தான தமிழர்களுடைய மோசமான நிலவரத்தைத் தங்களுடைய உடனடிக் கவனத்திற்கு இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் சர்பில் நான் கொண்டுவர விரும்புகிறேன் . வல்வெட்டித்துறை 10120 ஐப்பசி 03 , 2021 1987 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகிய , நடைமுறையிலுள்ள மாகாணசபைகள் முறைமையானது இலங்கையால் கடந்த 3 வருடங்களாகக் கைவிடப்பட்டுள்ளது . இலங்கை அரசாங்கமானது தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காமல் , பதிலாக சபைகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அகற்றுவதிலேயே ஈடுபட்டுள்ளது . இந்திய – இலங்கை ஒப்பந்தமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய பிராந்தியத்தை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாகத் தெளிவாக அங்கீகரித்துள்ளது . இவ்வுடன்படிக்கையானது , இடையிடையே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை நிர்ப்பந்தித்துள்ளது . உடன்படிக்கைக்கு நேர்முன்னரான கலந்துரையாடலின் போது , இந்திய அரசாங்கமும் அதனுடைய தலைவர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிரந்தர இணைப்பிற்குப் பொறுப்புநிற்பதாக தமிழ் அரசியல் மற்றும் ஆயுதத் தலைவர்களிடம் உறுதியளித்திருந்தனர் . மாகாணங்கள் இருதரப்பு ஒப்பந்தத்திற்கு அமைவாக இணைக்கப்பட்ட போதிலும் , இலங்கையானது 2007 இல் ஒரு தலைப்பட்சமாக அவற்றை மீளப்பிரித்தது . குறித்த உடன்படிக்கையின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 13 வது சீர்திருத்தத்தை இலங்கையானது எப்பொழுதுமே முழுமையாக அமுற்படுத்தவில்லை என்பதுடன் தற்பொழுது அதனை மேலும் பலமிழக்கச் செய்வதிலேயே ஈடுபட்டுள்ளது . இலங்கையானது தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் குடித்தொகையை மாற்றியமைக்கும் நோக்குடன் காணி அபகரிப்பு , இந்து ஆலயங்களைச் சேதப்படுத்தி தெய்விகத்தன்மைக்குப் பங்கம் விளைவித்தல் மற்றும் சிங்களக் குடியேற்றங்களில் ஒழுங்குமுறையாக ஈடுபட்டுள்ளது . இலங்கை அரசாங்கங்களும் அதனுடைய தலைவர்களும் தமிழ்த் தலைவர்களுக்கும் . சர்வதேச சமூகத்திற்கும் ஐநாவீற்கும் வழங்கியுள்ள அவர்களுடைய உடன்படிக்கைகள் , வாக்குறுதிகள் மற்றும் கடப்பாடுகளைத் திரும்பத்திரும்ப வழமைபோல் வஞ்சகமான முறையில் மீறியும் தவறியுமுள்ளனர் . இனப்போரானது முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களின் பின்னர் , தமிழர்கள் தொடர்கின்ற இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு இன்னும் காத்திருப்பதுடன் இனப்போருக்குரிய மூல காரணமாகிய சுய – நிர்ணயத்திற்கான அவர்களுடைய உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுக்காகவும் காத்திருக்கிறார்கள் . இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அதேசமயம் எமது பிராந்தியத்தில் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதன் பொருட்டு தமிழ் மக்கள் உலகிலுள்ள அதிகாரம்மிகுந்த நாடுகளில் ஒன்றாகிய இந்தியாவிடம் அழைப்பு விடுக்கின்றனர் . எமது சொந்த அரசியற் தலைவிதியைத் தீர்மானிப்பதன் பொருட்டு பொதுசன வாக்கெடுப்பு ஒன்றினை Page 1 of 2 ஒழுங்குசெய்வதன் மூலமாக சனநாய ரீதியில் அரசியற் தீர்வொன்றினை அடைவதற்கு உதவுமாறு உலகிலேயே பாரிய சனநாயக நாடு என்ற வகையில் இந்தியாவிடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் . நன்றி . உண்மையுடன் , MiPhngiligann எம்.கே சிவாஜிலிங்கம் செயலாளர் நாயகம் , தமிழ்த் தேசியக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , முன்னாள் ப.ட மாகாண சபை உறுப்பினர் பின்வருவன தொடர்பில் தங்களுடைய உடனடியான கவனத்தை மதிப்புடன் நான் கோரி நிற்கிறேன் : 1. 1987 ம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளவிணைப்பதற்கும் , மாகாண சபைகளுக்குரிய தேர்தலை நடாத்துவதற்கும் , உடன்படிக்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கடப்பாடுகள் இலங்கையால் முழுமையாக அமுற்படுத்தப்படுவதையும் . வடக்கு – கிழக்கு இணைப்பு நிரந்தரமானது என்பதையும் உறுதிசெய்வதற்கும் இந்தியாவிடம் கோரிநிற்கிறேன் . 2. தமிழ் மக்களுக்கு எதிரான கடந்த கால வன்முறை வடிவங்கள் மீள – இடம்பெறாமலிருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவல்ல நிரந்தர அரசியல் தீர்வினை சனநாயக ரீதியில் K. SHIVAJI LINGAM Secretary General Tamil National Party ( T.N.P. ) Former Member of Parliament நிலைநாட்டுவதற்காகவும் , அவர்களுக்கான ஈடுசெய் நீதியை வழங்குவதன் பொருட்டும் அவர்களை அடக்குமுறையிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவிப்பதன் பொருட்டும் இலங்கையின் வடக்கு . கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்காக ஐநாவினால் கண்காணிக்கப்படுகின்றதும் குவாட் நாடுகளினால் ( அவுஸ்திரேலியா , இந்தியா , யப்பான் , ஐக்கிய அமெரிக்கா ) நடாத்தப்படுகின்றதுமான பொதுசன வாக்கெடுப்பினை ஒருங்கிணைப்பதற்காக உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடம் கோரி நிற்கிறேன் என்றுள்ளது.