
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோரி கடந்த 2.8.2024 அன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலும், நகர்ப்புறப் பகுதியிலும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.





இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.