இலங்கை இராணுவ நான்காம் சிங்க றெஜிமென்ட் படைணியினரால் சக்கோட்டை வடக்கு காலை 4:20 மணியளவில் 35kg 650g கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரம், என்பன கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலோசாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் நான்காம் சிங்க ரெஜிமென்ட் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொமாண்டர் மேஜர் தவுளுகள உள்ளிட்ட புலனாய்வு குழுவினர் சக்கோட்டை வடக்கு பகுதிக்கு கஞ்சா கடத்த முற்பட்டவர்களை கைது செய்ய முயன்ற போது குறித்த கடத்தப்பிச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் படகிலிருந்து 35k 650 g கஞ்சாவையும், படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலீசாரிடம் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்