நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆக்கியவை இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட. தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழ் மக்கள் பொதுச்சபை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரை நிறுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை உருவாக்க காலத்திலிருந்தே தீர்மானித்திருந்தது.
இதனடிப்படையில் பலரது பெயர்கள் தமிழ் பொது வேட்பாளருக்காக முன்மொழியப்பட்டிருந்தனர்.
அவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவுசெய்யப்பட்டிருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஏற்கனவே அனந்தி சசிதரன், எம் கே சிவாஜிலிங்கம், வேலன் சுவாமிகள் ஆகியோர் போட்டியிட்ட விருப்பம் தெரிவித்திருந்தும், அவர்களில் தகமைகள் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையில் அரியநேந்திரனையே தற்போது தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களான கிழக்கு மாகாணத்தில் இருந்து சீலன் அவர்களும் வடக்கு மாகாணத்தில் வேலன் சுமாமிகளும் போட்டியிட விருப்பம் தெரிவிருந்தனர்.
ஆனாலும் வேலன் சுவாமிகள், கலாநிதி சிதம்பரநாதன் ஆகியோர் 13 வது திருத்த சட்டத்தை ஏற்பதில்லை என்கின்ற விடயத்தை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி அதனூடாக தீர்வை பெறவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து வந்த நிலையில் அவர்கள் தமிழ் மக்கள் பொதுச்சபையால் கழட்டி விடப்பட்டுள்ளனர்.
Thanks you thaalam.com