ஈழம்சேகுவேராவின் பூதவுடல் வவுனியாவில் நல்லடக்கம்…!

முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேராவின் (இசைப்பிரியன்) இறுதிப்பயணம் வவுனியா கந்தன்குளத்தில் இடம்பெற்றது.

அன்னாரின் இல்லத்தில் கடந்த 28/07/2024 அன்று  காலை 9 மணிக்கு கிரியைகள் ஆரம்பமானதை தொடர்ந்து நினைவஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து பூதவுடல் கந்தன்குளம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர்கள், அரசியல் சமூக பிரதிநிதிகள், கிராம மக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறுதி நிகழ்வு ஏற்பாடுகளினை போராளிகள் நலன்புரி அமைப்பை சேர்ந்த முன்னாள் போராளிகள் செய்திருந்தனர்.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தை சேர்ந்த தாய்மார்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும், கலைஞனாகவும் பல்துறைகளிலும் கால் பதித்தவர்.

வன்னியில் புனிதபூமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பாடசாலைப் படிப்பையும் முடித்து நிதர்சனத்திலும், தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் பணி புரிந்துள்ளார்.

2009 இன் பின்னர் புனர்வாழ்வுக்கு சென்று வந்த முன்னாள் போராளிகளின் இளவயது மரணங்களின் தொடர்ச்சியாக இவரின் மரணமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews