யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் நேற்றிரவு 06.08.2024 குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது.
விஜயகுமார் குணேஸ் என்கின்ற தாளையடி தபால் நிலைய ஊழியரின் வீடே இவ்வாறு விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.





மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தர் வெளியில் குடும்பத்துடன் சென்றபோதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.