
Deயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியம்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை 06/08/2024 காலை 8 மணி முதல் இடம் பெற்றது.





பாடசாலை அதிபர் சு.கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் வடக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், கூட்டுறவு ஆணையாளருமாகிய ந.திருலிங்கநாதன் கலநத
கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக பழைய மாணவனும் பாடசாலை பரிசளிப்பு விழாவின் அனுசரணையாளருமான க.இராஜரட்ணம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக பழைய மாணவனும் பாடசாலை பரிசளிப்பு விழாவின் அனுசரணையாளருமான க.இராஜரட்ணம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
காலை 8 மணியளவில். மாணவர்களின் நடை பவனியும் அதனை தொடர்ந்து சைக்கிள் பவனியும், பழைய மாணவர்களின் வாகன பேரணிகளும் இடம் பெற்றது. பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த பவனி மாமுனைச் சந்தியை அடைந்து அங்கிருந்து மாமுனை கடற்கரைக்கு சென்று. கடற்கரையிலருந்து தாளையடி கடற்கரை சென்று அங்கிருந்து மருதங்கேணி சந்திக்கு சென்று அங்கிருந்து மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், அயல் பாடசாலை அதிபர்கள் கோட்டக்கல்வி பணிப்பாளர், உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.