அக்கராயனில் பரசூட் முறை நெற் பயிர்ச்செய்கை வயல் அறுவடை!

கிளிநொச்சி அக்கராயன்குளம்  விவசாய போதனாசிரியர் பிரிவில் அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நவீன  முறையான பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று(07) காலை 10.00மணிக்கு பிற்பகல் நடைபெற்றது. அக்கராஜன்குளம் பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
 பாட விதான மற்றும் விவசாயப் போதனாசிரியர்களினால் வருகை தந்த விவசாயிகளுக்கும், பிரமுகர்களுக்கும் பரசூட் முறையிலான நெல் நெற்கை முறைபற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பணிமனை பாடவிதான உத்தியோகத்தர்கள்,  விவசாய போதனாசிரியர்கள், கமநல சேவை நிலைய  உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ்,  மாவட்டத்தின் பல இடங்களிலும் இவ்வாறான முன்மாதிரி துண்டச்செய்கைகள் செய்கை பண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews