
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உபிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைபப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 09.08.2024 (வெள்ளிக்கிழமை) மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
த. கனகராஜ்
பிராந்திய இணைப்பாளர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம்