
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பெருந்திருவிழா கால ஆண்மீக சொற்பொழிவில் இன்றைய தினம் “திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனைகள்” தலைப்பில் அருளுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவை உறுப்பினரும், ஆசிரியருமான சத்தியநாதன் வாகீசன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.



சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரசை உறுப்பினர் திரு.சிவநாதன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.