
மருதங்கேணி பொலிசாரால் சற்றுமுன் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது
சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்காக வீட்டில் இருந்து கடற்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் குறித்த வலை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று மருதங்கேணி பொலிசார் சட்டவிரோத சுருக்குவலை ஒன்றை கைப்பற்றியுள்ளனர்
கைப்பற்றப்பட்ட சுருக்குவலை தற்பொழுது மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது