அண்மைய நாட்களாக முகமாலை வடக்குப் பகுதியில் கடும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது
.





வாய்க்கால்களில் மண் ஏற்றப்பட்டு துரிசும் உடைத்தெறிய பட்டு மண் ஏற்றப் பட்டு வருகின்றது.
இதனால் வெள்ள நீர் வடிந்து ஓட முடியாது காணப்படுவதுடன்,
கிராமங்களில் வெள்ளம் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.



ஆகவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
இதேவேளை குறித்த பகுதியினை கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இன்றையதினம் பார்வையிட்டுள்ளனர்.