வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி. தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி. தி. சர்வானந்தன் 03.08.2024 தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதமானது வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம். சாள்ஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.