
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் நேற்று 14/08/2024 நினைவு கூரப்பட்டுள்ளது.


செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில். தாய்த்தமிழ் பேரவையினரில் ஏற்ப்பாட்டில் காலை 9:00 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது, இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தையார் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட பெற்றோர் பிள்ளைகளின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள். தமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்